உத்ரகோசமங்கை மரகத நடராஜர்:
Thursday, April 30, 2015 | comments
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் ஆலயம்:
Thursday, January 31, 2013 | comments
தமிழகத்தின் மிக தொன்மையான வேத இதிகாசங்களுக்கு முந்திய திருத்தலம் ஒன்று உண்டு அதுதான் திருப்புல்லாணி.கடலோர நகரமான இந்த ஊர் ராமநாதபுரத்தின் தென்கிழக்கே 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு ஆதிஜெகநாத பெருமாள் பத்மா சினி தாயார்எழுந்தருளுயுள்ளனர்.வைணவர்களின் 108 திவ்விய ஆலயங்களில் திருப்புல்லாணி தலைசிறந்த ஒன்று.
வேதகாலத்தில் வாழ்ந்த அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு நீண்ட நெடுங்காலமாக பிள்ளை பேறு இல்லாமல் இருந்தது.இதனால் தசரத சக்கரவர்த்தி திருப்புல்லாணி வந்து யாகங்கள் பல நடத்தியதன் பலனாக ராமபிரான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பிறந்ததாக ஐதீகம்.
இலங்கை மன்னரான ராவணன் சீதபிரட்டியை இலங்கைக்கு கடத்தி சென்றதை தொடர்ந்து ராமபிரான் சீதாதேவியை மீட்பதற்காக திருப்புல்லாணிக்கு வந்தார்.ராமர் கடலில் அணை அமைத்து இலங்கை செல்ல திட்டமிட்டார்.அப்போது திருப்புல்லாணியில் ராமபிரான் தர்பைபுல் மீது அமர்ந்துநீண்ட நெடிய கடலை அளவிட்டார்.இதன் காரணமாகவே இந்த ஊருக்கு “தர்பாசயணம்" என்று ஒரு பெயர் ஆயிற்று .வானர சேனை உதவியுடன் கடலில் பாலம் அமைக்கப்பட்டது.அதுதான் இன்றளவும் சேது அணை ‘சேது பந்தனம்' என்று அழைக்கப்படுகிறது.
ராமபிரான் இலங்கை செல்வதற்கு முன்பு திருப்புல்லாணியில் எழுந்தருளியுள்ள ஆதிஜெகநாத பெருமாளிடம் ராவணனை கொல்ல வில் பெற்று சென்றதாக புராண வரலாறுகளில் கூறப்படுகிறது.இந்துகளின் புன்னியதலன்களுள் ஒன்றான இத்திருத்தலம் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது.
கோவிலின் தொலைபேசி:04567-254527
மதுரை மாவட்டத்தில் உள்ள அருவிகள்:
Tuesday, January 22, 2013 | comments (1)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் 9 கி.மீ தூரத்தில் இயற்க்கை எழில் கொஞ்சும் சிறுமலை அடிவாரத்தில் தாடகை அம்மன் அருவி உள்ளது.இது மதுரை மாவட்டத்தின் குற்றாலமாக திகழ்கிறது.அதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.இந்த அருவி 600 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.இங்கு குளிப்பதற்கு பாதுகாப்பாக கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருவியின் அழகை ரசிப்பதற்காக அருவியின் மேலே ஏறிச்சென்று பலர் தவறி விழுந்து பலியாகி உள்ளனர்.அதனால் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கிளிமூக்கு அருவி,காட்டுபாறை அருவி,ஒத்தபாறை அருவி,கிளிநொச்சி அருவி உள்பட பெயர்தெரியாத மழைகாலங்களில் மட்டுமே தோன்றி மறையும் பல அருவிகள் உள்ளன.இவைகளின் அழகை தூரத்தில் இருந்துதான் ரசிக்க வேண்டும்.
ஏழைகளின் ஊட்டி ஏற்காடு:
| comments
‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காடு சேலத்தின் அருகில் உள்ளது.ஏற்காட்டில் படகு சவாரி செய்யும் அழகான ஏறி உண்டு.ஜென்ஸ்சீட் என்று அழைக்கப்படும் ஏற்காட்டின் உயரமான பகுதியில் இருந்து ஏற்காடு நகரையே பார்க்க முடியும்.மலை ஊற்று தண்ணீர் கிள்ளியூர் அருகில் 300 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்சியாக கொட்டுகிறது.லேடிஸ் சீட் என்ற பகுதியில் இருந்து ஏற்காடு மலை பாதையை பார்க்க முடியும்.அதில் எ=ஏறிவரும் வாகனங்களையும் அவை வளைந்து நெளிந்து வருவதையும் காணலாம்.மேட்டூர் அணையை ஏற்காட்டில் ‘பகாடா பாயிண்ட்’என்ற இடத்தில இருந்து நல்ல சூரிய வெளிச்சத்தில் தெளிவான வானமாக இருந்தால் காண முடியும்.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ தூரம் சமவெளியிலும் 25 கி.மீ தூரம் மலை பாதையிலும் பயணம் செய்தால் 1 மணி நேரத்தில் குளுகுளு ஏற்காட்டை அடையலாம்.
அருவிகள் இசைபாடும் குற்றாலம்:
Monday, January 21, 2013 | comments
குற்றாலம் என்றதுமே பன்னீர் போன்ற சாரல் மழையும் ஜில்லென்று வீசும் குளிர்ந்த காற்றும் ஆர்பரித்து வரும் அருவிகளும்தான் நினைவுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்கு சீசன் இருக்கும்.இந்த காலங்களில் இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவரும் வந்து சீசனை அனுபவித்து செல்கின்றனர்.மேலும் கார்த்திகை, மார்கழி,தை மாதங்களில் சபரிமலை செல்லும் பக்தர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.
குற்றாலத்தில் அகத்தியர் தவம் இருந்ததாக வரலாறு கூறுகிறது.இங்கு மெயின் அருவிக்கு மிக அருகில் சுவாமி சமேத குழல் வாய்மொழி அம்மைகோவில் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உற்பத்தியாகி வரும் ஆற்றில் இருந்துதான் அருவிகளுக்கு தண்ணீர் வருகிறது.சுமார் 200 அடி உயரத்தில் இருந்து மெயின் அருவியாக தண்ணீர் கொட்டுகிறது.
இதிலிருந்து ஒரு பிரிவு சிற்றருவிக்கு திருப்பி விடப்பட்டு இங்கு ஆண்,பெண் என தனித்தனியாக அறை கட்டப்பட்டு குளித்து வருகிறார்கள்.இந்த சிற்றருவி வழியாக மலைக்கு மேல் 5 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அருவி உள்ளது.இங்கு சற்று எச்சரிக்கையுடன் குளிக்க வேண்டும்.இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் மலைபகுதியில் தேனருவி உள்ளது. இங்கு குளிப்பது ஆபத்தானது.இதற்கு மேலும் வனபகுதியில் பாலருவி உள்ளது.இங்கு செல்வதே ஆபத்தானது.அதேபோல் ஒரே இடத்தில 5 கிளைகளாக பிரிந்து விழும்ஐந்தருவி பழத்தோட்ட அருவி குறிப்பிடத்தக்கவை.
குற்றாலத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் ரோடு வழியாக சென்றால் 9 கிலோமீட்டர் தொலைவில் பழைய குற்றாலம் உள்ளது.இந்த அருவி 1958-ல் தொடங்கப்பட்டது.காமராசர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டது.இங்கு 5 லாட்சுகளும் ,10 காட்டேஜுகளும் உள்ளன.அருவி மலைக்கு மேல் சிவன் கோவில்,கன்னிமாரம்மன் கோவில்,கருப்பசாமி கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களில் எல்லா காலங்களிலும் பூஜைகள் நடைபெறுகிறது.இந்த அருவியில் சுமார் 180 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக தண்ணீர் விழுகிறது.பழைய குற்றாலம் செல்லும் வழியில் புலியருவி உள்ளது.
குற்றாலத்தில் நகரபஞ்சயதுகள் மூலம் 3 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டுள்ளது.இதில் 2 பூங்கா நகர பஞ்சயத்து அலுவலகம் அருகில் உள்ளது.ஒரு பூங்கா மெயின் அருவிகரை அருகிலும் அமைந்துள்ளது.இதனையடுத்து பாம்பு பூங்கா உள்ளது. பாம்பு பூங்காவின் அருகில் மான்பூஙகா ஒன்று இருந்தது.அந்த இடத்தில் சமிபத்தில் ரூ.24 லட்சம் செலவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.தினமும் இந்த குளத்தில் உள்ள தண்ணீர் சுதிகரிக்கபடுகிறது. தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்று சித்திரசபை .இது குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் வலதுபுறம் உள்ளது.
படகு சவாரி:
குற்றாலம் ஐந்தருவியை ஒட்டியுள்ள வெண்ணமடை குளத்தில் உள்ள படகு குழாமில் படகு சவாரி நடந்து வருகிறது.தற்போது 2 இருக்கைகள் கொண்ட பெடல் படகுகள் 4-ம், 4 இருக்கைகள் கொண்ட பெடல் படகுகள் 4-ம் துடுப்பு படகு ஒன்றும் இயங்கி வருகிறது.இதில் 2 இருக்கை கொண்ட பெடல் படகில் அரைமணி நேரத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
குற்றாலத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்:
- மெயின் அருவி
- ஐந்தருவி
- சிற்றருவி
- செண்பகாதேவிஅருவி
- தேனருவி
- பாலருவி
- பழைய குற்றாலம்
- புலியருவி
- பழத்தோட்ட அருவி
- பாம்பு பூங்கா
- படகு குலாம்
- சித்ரசபை
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி:
| comments
பசுமை காடுகள் சூழ்ந்த அழகிய நீர்வீழ்ச்சி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.இது தருமபுரி மாவட்டத்தில் காவிரி நதி தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் அமைந்துள்ளது.
பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஒகேனக்கல்லில் தினமும் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழியும். இது சிறந்த சினிமா சூட்டிங்ஸ்பாட்டாகவும் விளங்குகிறது.சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து அதிக சத்தத்துடன் விழும் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவரும் முதன்மையான இடமாகும். இதனோடு பல துணை நீர்வீழ்ச்சிகள் கொட்டுவது ரம்மியமான காட்சியாகும்.
பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடந்து சென்று நீர்வீழ்ச்சிகளை கண்டு காணலாம்.தொங்கு பாலம் வழியாகவும் ஆற்றை கடந்து ரசிக்கலாம்.குளிப்பதர்கான நீர்வீழ்ச்சி தனியாக உள்ளது.இங்கு சீசன் மட்டும் இல்லாமல் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பது ஓகேனக்கல்லின் தனிச்சிறப்பாகும்.
இங்கு வனத்துறை சார்பில் ஒரு முதலை பண்ணையும் ஒரு சிறிய மிருககாட்சி சாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் தர்மபுரியில் இருந்து 46 கி.மீ.தூரத்திலும் சேலத்தில் இருந்து 124கி.மீ.தூரத்திலும்.மதுரையில் இருந்து 346 கி.மீ.தூரத்திலும் உள்ளது.
பூலோக வைகுண்டம்:
Sunday, January 20, 2013 | comments
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் திருச்சியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் காவிரி கரையில் அமைந்து உள்ளது.இத்தலத்தின் மொத்த பரப்பளவு 156 ஏக்கர்.தென்கிழக்கு ஆசியாவில் மிக உயரமான கோபுரம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் தான்.உயரம்236 அடி. முன்பக்க அகலம் 166 அடி. பக்கவாட்டில் அகலம் 97 அடி.கோபுரத்தின் எடை 120000 டன்.13 நிலைகள் உள்ள ராஜகோபுரத்தின் உச்சியில் ௧௩ கலசங்கள் உள்ளன.ஒவ்வொரு கலசமும் 10.5 அடி உயரம் உடையது.5.5 அடி சுற்றளவும், 135 கிலோ எடையும் கொண்டது.இந்த ராஜகோபுரம் திருச்சி மலைக்கோட்டையை விட பெரியது.
இத்தலத்தில் மூலவர் ஸ்ரீரங்கநாதன் ,உற்சவர் நம்பெருமாள் ,தாயார் -ஸ்ரீரெங்க நாயகி கோயில்கொண்டுள்ளனர்.
இந்த தலத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.திருச்சி சென்ரல் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் ஸ்ரீரங்கம் செல்கிறது.
கோவில் போன் நம்பர்: 95431-2432246
