பசுமை காடுகள் சூழ்ந்த அழகிய நீர்வீழ்ச்சி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.இது தருமபுரி மாவட்டத்தில் காவிரி நதி தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் அமைந்துள்ளது.
பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஒகேனக்கல்லில் தினமும் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழியும். இது சிறந்த சினிமா சூட்டிங்ஸ்பாட்டாகவும் விளங்குகிறது.சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து அதிக சத்தத்துடன் விழும் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவரும் முதன்மையான இடமாகும். இதனோடு பல துணை நீர்வீழ்ச்சிகள் கொட்டுவது ரம்மியமான காட்சியாகும்.
பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடந்து சென்று நீர்வீழ்ச்சிகளை கண்டு காணலாம்.தொங்கு பாலம் வழியாகவும் ஆற்றை கடந்து ரசிக்கலாம்.குளிப்பதர்கான நீர்வீழ்ச்சி தனியாக உள்ளது.இங்கு சீசன் மட்டும் இல்லாமல் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பது ஓகேனக்கல்லின் தனிச்சிறப்பாகும்.
இங்கு வனத்துறை சார்பில் ஒரு முதலை பண்ணையும் ஒரு சிறிய மிருககாட்சி சாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் தர்மபுரியில் இருந்து 46 கி.மீ.தூரத்திலும் சேலத்தில் இருந்து 124கி.மீ.தூரத்திலும்.மதுரையில் இருந்து 346 கி.மீ.தூரத்திலும் உள்ளது.

Post a Comment