திருச்செந்தூர் :

Sunday, January 20, 2013 | comments

திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் கடற்கரை கன்னியாகுமரியில் இருந்து 100கிலோ மீட்டர் தூரத்திலும் திருநெல்வேலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.இறைவன்-சுப்பிரமணியன்,இறைவி -வள்ளி,தெய்வானை,முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்க புறப்பட்டு வந்தபோது இங்குதான் தங்கியதாக கூறப்படுகிறது.இங்கே விசுவகர்மாவல் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவ குருவான வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார்.

ஆலயத்தின் கர்ப்பகிரகத்தில் சூரசம்கார மூர்த்தியான பாலசுப்பிரமணியன் சிவபூஜை புரியும் வகையில் தம்முடைய நான்கு திருக்கரங்களில் இரண்டை அபயவரத ஹஸ்தங்களாகவும்,ஒரு கரம் ருத்ராட்சமாலை தாங்கவும் ,மற்றொரு கரம் புஷ்மமேந்தி அர்ச்சனை செய்யும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.திருச்செந்தூரில் உள்ள நாழிக்கிணற்றில் பக்தர்கள் நீராடுவார்கள்.இந்த நாழிக் கிணற்றை கந்தபுஷ்பகரணி என்று அழைப்பார்கள்.

முருகப்பெருமான் தியான நிலையில் உள்ள திருத்தலம் இது மட்டும்தான்.இதைப்போன்ற தியான நிலையில் இருக்கும் முருகனை வேறெந்த திருத்தலத்திலும் காண இயலாது.

இத் திருத்தலத்தின் தொலைபேசி எண்: 04639-242221,242271

மதுரையில் இருந்து திருச்செந்தூர் 214 கி.மீ தூரத்திலும் நெல்லையில் இருந்து 60 கி.மீ தூரத்திலும் உள்ளது.

திருச்செந்தூர் திருத்தலம் திறக்கும் நேரம்:

5.30 am நடைதிறப்பு
12.00 உச்சிகாலபூஜை
8.40pm திருக்காப்பிடுதல்

 

தங்கும் விடுதிகள் போன்:

மணி ஐயர் லாட்ஜ் 2242109
ரத்னா லாட்ஜ் 242383
சரவணா லாட்ஜ் 242258
அசுவினி லாட்ஜ் 242133
ஓட்டல் தமிழ்நாடு 242268
நவீன் லாட்ஜ் 246301
ஓட்டல் வல்லிவிளை 242910
அண்ணாமலை லாட்ஜ் 242324
அன்னபூர்ணா லாட்ஜ் 242468
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger