குற்றாலம் என்றதுமே பன்னீர் போன்ற சாரல் மழையும் ஜில்லென்று வீசும் குளிர்ந்த காற்றும் ஆர்பரித்து வரும் அருவிகளும்தான் நினைவுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்கு சீசன் இருக்கும்.இந்த காலங்களில் இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவரும் வந்து சீசனை அனுபவித்து செல்கின்றனர்.மேலும் கார்த்திகை, மார்கழி,தை மாதங்களில் சபரிமலை செல்லும் பக்தர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.
குற்றாலத்தில் அகத்தியர் தவம் இருந்ததாக வரலாறு கூறுகிறது.இங்கு மெயின் அருவிக்கு மிக அருகில் சுவாமி சமேத குழல் வாய்மொழி அம்மைகோவில் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உற்பத்தியாகி வரும் ஆற்றில் இருந்துதான் அருவிகளுக்கு தண்ணீர் வருகிறது.சுமார் 200 அடி உயரத்தில் இருந்து மெயின் அருவியாக தண்ணீர் கொட்டுகிறது.
இதிலிருந்து ஒரு பிரிவு சிற்றருவிக்கு திருப்பி விடப்பட்டு இங்கு ஆண்,பெண் என தனித்தனியாக அறை கட்டப்பட்டு குளித்து வருகிறார்கள்.இந்த சிற்றருவி வழியாக மலைக்கு மேல் 5 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அருவி உள்ளது.இங்கு சற்று எச்சரிக்கையுடன் குளிக்க வேண்டும்.இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் மலைபகுதியில் தேனருவி உள்ளது. இங்கு குளிப்பது ஆபத்தானது.இதற்கு மேலும் வனபகுதியில் பாலருவி உள்ளது.இங்கு செல்வதே ஆபத்தானது.அதேபோல் ஒரே இடத்தில 5 கிளைகளாக பிரிந்து விழும்ஐந்தருவி பழத்தோட்ட அருவி குறிப்பிடத்தக்கவை.
குற்றாலத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் ரோடு வழியாக சென்றால் 9 கிலோமீட்டர் தொலைவில் பழைய குற்றாலம் உள்ளது.இந்த அருவி 1958-ல் தொடங்கப்பட்டது.காமராசர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டது.இங்கு 5 லாட்சுகளும் ,10 காட்டேஜுகளும் உள்ளன.அருவி மலைக்கு மேல் சிவன் கோவில்,கன்னிமாரம்மன் கோவில்,கருப்பசாமி கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களில் எல்லா காலங்களிலும் பூஜைகள் நடைபெறுகிறது.இந்த அருவியில் சுமார் 180 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக தண்ணீர் விழுகிறது.பழைய குற்றாலம் செல்லும் வழியில் புலியருவி உள்ளது.
குற்றாலத்தில் நகரபஞ்சயதுகள் மூலம் 3 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டுள்ளது.இதில் 2 பூங்கா நகர பஞ்சயத்து அலுவலகம் அருகில் உள்ளது.ஒரு பூங்கா மெயின் அருவிகரை அருகிலும் அமைந்துள்ளது.இதனையடுத்து பாம்பு பூங்கா உள்ளது. பாம்பு பூங்காவின் அருகில் மான்பூஙகா ஒன்று இருந்தது.அந்த இடத்தில் சமிபத்தில் ரூ.24 லட்சம் செலவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.தினமும் இந்த குளத்தில் உள்ள தண்ணீர் சுதிகரிக்கபடுகிறது. தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்று சித்திரசபை .இது குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் வலதுபுறம் உள்ளது.
படகு சவாரி:
குற்றாலம் ஐந்தருவியை ஒட்டியுள்ள வெண்ணமடை குளத்தில் உள்ள படகு குழாமில் படகு சவாரி நடந்து வருகிறது.தற்போது 2 இருக்கைகள் கொண்ட பெடல் படகுகள் 4-ம், 4 இருக்கைகள் கொண்ட பெடல் படகுகள் 4-ம் துடுப்பு படகு ஒன்றும் இயங்கி வருகிறது.இதில் 2 இருக்கை கொண்ட பெடல் படகில் அரைமணி நேரத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
குற்றாலத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்:
- மெயின் அருவி
- ஐந்தருவி
- சிற்றருவி
- செண்பகாதேவிஅருவி
- தேனருவி
- பாலருவி
- பழைய குற்றாலம்
- புலியருவி
- பழத்தோட்ட அருவி
- பாம்பு பூங்கா
- படகு குலாம்
- சித்ரசபை

Post a Comment