தமிழகத்தின் முதல் குடவறைகோவில் என்ற பெருமைக்குரியது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்.இந்த கோவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது. இக்கோவில் ஒரு குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயிலாகும்.கோயிலின் தென்புறத்தில் கிழக்கு மேற்காக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக குடைந்து செதுக்கி இந்த கோவிலை வடிவமைத்துள்ளனர்.

தலவரலாறு :
விநாயகப் பெருமான் கஜமுகாசுரனை கொன்ற பழியினைபோக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார்.விநாயகப்பெருமான் சிவா பெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து புஜித்ததற்கான ஐதீகம் கொண்டது இத்திருத்தலம்.
- மலை நெற்றியில் 6அடிக்குமேல் உயரத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பிள்ளையாரின் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் வலது கை சிறிய லிங்கத்தை ஏந்தியுள்ள நிலையில் உள்ளது. இடதுகை இளம் தொந்தியினை சுற்றியுள்ள வயிற்றுக் கச்சை மீது கொண்டுள்ளது.தும்பிக்கை வலம்புரியாக வளைந்திருப்பது இதன் தனி சிறப்பாகும்.
- பிள்ளையாரின் உருவங்களில் இது காலத்தால் முற்பட்டது.எனவே இங்குள்ள விநாயகர் இரண்டு கைகளோடு வடக்கு முகமாக காட்சிதருகிறார்.
- விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.எனவேதான் பிள்ளையார்பட்டி கோவிலில் நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
| காலை 5.30 | நடை திறப்பு |
| 6.00 | திருவனந்தல் |
| 8.00 | கணபதி ஹோமம் |
| 11.00 | அபிஷேகம் |
| 12.00 | உச்சிகால பூஜை |
| மாலை 4.00 | அபிஷேகம் |
| 5.30 | சாயரட்சை |
| 7.30 | அர்த்தசாம பூஜை |
| 8.00 | நடை சாத்துதல் |
கோவில் தொலைபேசி எண்: 04577-264240

Post a Comment