மதுரை -மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்

Sunday, January 13, 2013 | comments

தென்னிந்தியாவில் மதுரை நகரில் அமைந்திருக்கும் மீனாட்சியம்மன் கோவில் கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.கடம்ப மரங்கள் நிறைந்த ஒரு காட்டில் ஒரு  மரத்தின் கீழ் சிவலிங்கம் இருந்தது. ஒரு சமயம் தேவராஜன் இந்திரன் தனக்கு பீடிக்கப்பட்டிருந்த பிரம்மஹத்தி  தோஷத்தை போக்குவதற்காக பூலோகத்திற்கு வந்தபோது சிவலிங்கத்தை கடம்ப மரத்தின் கீழ் அமைத்திருக்கலாம் என கூறப்படுகிறது .பாபவிமோசனம் ஏற்பட்டதின் நிமித்தம் தன் நன்றிக்கடனை செலுத்தும் விதத்தில் இந்திரன் மூலஸ்தானத்தையும் ,விமானத்தையும் ஏற்படுத்தியதாக நம்ப படுகிறது.பின் வெகுகாலம் கழித்து தனஞ்சயன் என்ற வணிகன் தன் வேலை நிமித்தமாக அவ்வழியாக சென்றான்.அப்போது கட்டில் இருந்த கோயிலைக்கண்டு அதிசயித்து அந்த செய்தியை மனவூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தகுலசேகர பாண்டிய மன்னனிடம் தெரியப்படுத்தினான். பிறகு கோவிலை கண்ட குலசேகர பாண்டியனோ கடம்ப வணக்காட்டை அழித்து சிவலிங்கத்தை சுற்றி ஒரு சிறிய நகரை நிர்மாணித்தார் .அதுவே  பிற்காலத்தில் மதுரை நகரமாயிற்று அந்த கோவில் மீனாட்சி அம்மன் என்று அழைக்கப்படலானது.
 

கோவிலின் தற்போதைய வளர்ச்சி 13 மற்றும் 14ம் நூற்றண்டுகளுக்கு இடைப்பட்டது.இக்கோயில் 65000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது .847அடி நீளமும் , 792 அடி அகலமும் கொண்டது.160 அடி உயரம் கொண்ட தெற்கு கோபுரமும் கொண்டது.இத்திருக்கோவிலில் மொத்தம்  11 கோபுரங்கள் உள்ளது.
 
அஷ்டசக்க்தி மண்டபம் ,வேடன் சிலைகள் ,மீனாட்சி நாயக்கர் மண்டபம் ,ஆடி வீதிகள்,முதளிப்பில்லை மண்டபம் ,பொற்றாமரைக் குளம், ஊஞ்சல் மண்டபம்,கிளிக்கூண்டு மண்டபம், அம்மன் சன்னதி,கம்மத்தடி மண்டபம், சுவாமி சன்னதி, வீரவ சந்தராயர் மண்டபம்,ஆயிரங்கள் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், திருக்கல்யாண மண்டபம்,இசைத்துண்கள் ஆகிய அனைத்தும் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது.
 
இங்குள்ள பொற்றாமரைக் குளம் அனைவரையும் கவந்த்தது.தங்கத்தாலேயே ஆனா தாமரையை தாங்கி நிற்கும் குளம் என்பதாலே இதற்கு பொற்தாமரைகுளம் என்று பெயர். இக்குளம் 165 அடி நீளமும் , 120 அடி அகலமும் உடையது.மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பிரசித்தி பெற்றது. தூண்களின் அமைப்பு ஒரே செங்குத்தான கோட்டில் நின்று பார்வையாளர்களை பரவசபடுதுகிறது.இம்மண்டபம் 250 அடி நீளமும்,240 அடி அகலமும் கொண்டது.நுழைவு வாசலின் மேற்கு பகுதியில்  60 தமிழ் வருடங்களைக்குறிக்கும் ஒரு சக்கரம் அமைக்கப்பட்டிருக்கிறது . 
 
 கோவில் திறக்கும் நேரம் :

காலை5 மணி :நடைதிறப்பு.
5.30மணி :திருவனந்தல்.
7.00 மணி விழா பூஜை,
11.00 மணி உச்சிகால பூஜை
மாலை4.30  மணி சாயரட்சை பூஜை ,
இரவு7.30  மணி அர்த்தஜாம பூஜை ,
9.00மணி பள்ளியறை பூஜை,
9.30 மணி நடசாத்துதல்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger