காந்தி மியுசியம்:

Monday, January 14, 2013 | comments

மதுரை என்றது நம் நினைவுக்கு வரும் சில முக்கிய இடங்களுள் காந்தி                 மியுசியமும் ஒன்று.கலையம்சம் கொண்ட இந்த கட்டிடம் 1960-ம் ஆண்டு ராணி மங்கம்மாளின் கோடை வாசஸ்தலமாக இருந்தது.வெகுகாலம் கழித்து 1955-ல் இந்த கட்டிடத்தை காந்தி நினைவு நிலையமாக அமைக்க தமிழக அரசு முடிவு செய்து.1959 ஏப்ரல் 15-ம் தேதி ஜவஹர்லால் நேரு மதுரை காந்தி மியுசியத்தை தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட காந்தி மியுசியம் இதுதான்.தென்னிந்தியாவில் மதுரையில் மட்டும்தான் காந்திகென மியுசியம் உள்ளது. இந்த மியுசியத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் அறிய 265படங்கள் கொண்டது ஒரு பிரிவாகவும், 124படங்கள் கொண்ட,காந்தியின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் பகுதி ஒரு பிரிவாகவும், காந்தியடிகள் பயன்படுத்திய 14பொருட்கள் கொண்ட பகுதி ஒரு பிரிவாகவும் மொத்தம்  மூன்று பிரிவுகள் உள்ளது.

காந்தி 1948 -ம் ஆண்டு ஜனவரி 30-ல் சுட்டுகொள்ளப்பட்டபோது அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த வேட்டி இங்குள்ளது.லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது குளிருக்காக காந்தி போர்த்திக்கொண்ட சால்வை,புனேயில் உள்ள ஆகாகான் அரண்மனை ஜெயிலில் காந்தி இருந்தபோது பயன்படுத்திய மரச்செருப்பு இங்குள்ளது.பஞ்சகானி என்ற இடத்தில காந்தி பயன்படுத்திய தோல் செருப்பு இங்குள்ளது.காந்தியடிகளே நூற்ற நூல் தலையணை உரை ,பெட்சீட் ,துண்டு ,வேட்டி ஆகியவை இங்கு பாதுகாக்கபடுகிறது.இவை தவிர காந்தியடிகள் கைப்பட எழுதிய பல கடிதங்கள்  தமிழில் பாரதியாருக்கு அவர் எழுதிய கடிதங்கள் ,திருக்குறள் ஆகியவற்றையும் இங்கே காணமுடிகிறது.

காந்தி மியுசியத்தை பார்வையிட நுழைவு கட்டணம் ஏதுமில்லை,அணைத்து நாட்களுமே திறந்திருக்கும் விடுமுறை கிடையாது.

மியுசியம் திறக்கும் நேரம்:

காலை  10 TO 1

மாலை 2 TO 5.45

தொலைபேசி:0452-2531060

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger