உத்ரகோசமங்கை மரகத நடராஜர்:

Thursday, April 30, 2015 | comments

ராமநாதபுரத்தின் தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது திருஉத்திரகோசமங்கை.இத்திருதலத்தில் மங்களநாதரும் மங்கலேஸ்வரியும் கோவில் கொண்டுள்ளனர்.இக்கோவில் இலக்கிய சிறப்பும்,இதிகாச சிறப்பும் மிக்கது வேதகாலதிற்கும் முந்திய கோவில் இது.இந்த கோவில் நகரை  'பூலோக கைலாசம்'என்றும் 'ஆதிசிதம்பரம்'என்றும் அழைக்கின்றனர்.
மிக புராதனமான புகழ் மிக்க இந்த ஆலயத்தின் பழமை சிறப்பை பாதுகாக்கவும்,அதற்கு புதிய எழில் ஊட்டவும் மத்திய அரசின் தொல்லியல் துறை ரூ.2கோடி வழங்கியுள்ளது.
திருஉத்திரகோசமங்கை ஆலயத்தில் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத்தினால் ஆனா ஒரே மரகத கல்லில் செதுக்கப்பட்ட 6அடி உயர நடராஜர் சிலை உள்ளது.இன்றளவும் இம் மரகத சிலையினை விலை மதிக்க முடியவில்லை.அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு இவை ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.இச்சிலை உலகளவில் அதிசியமானவை.
ஒலி-ஒளியினால் சிதையும் தன்மை மரகதத்திற்கு உண்டு. ஆதலால் இச்சிலை மீது சந்தனகாப்பை கவசம்போல் அப்பி வைத்துள்ளனர்.
வருடத்தின் ஒரே நாளான ஆருத்திரா தரிசனத்தன்று சந்தன காப்பு கலைக்கப்பட்டு சிலமணி நேரங்களில் மீண்டும் சந்தன காப்பு பூசப்படும்.
ஒருமுறையேனும் இங்கு சென்று வரலாம்.
கோவிலை பற்றிய மேலும் தகவலுக்கு   : 04567-256333
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger