தேவிபட்டினம்–நவபாஷனம்:

Tuesday, January 15, 2013 | comments

ராமாயண இதிகசதிற்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் அது மிகையல்ல.

ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 10 மைல் தூரத்தில் அமைந்துள்ளது நவபாசனம் என்றழைக்கப்படும் தேவிபட்டினம். இது ஒரு கடற்கரை நகரம். இந்துகளின் புண்ணிய தலங்களுள் ஒன்று.இங்கு கடலுக்குள் நவகிரங்ககள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இங்கு வரும் பக்தர்கள் கடலுக்குள் இருக்கும் நவகிரகத்தை கழுத்தளவு தண்ணிரில் வலம் வருவது ஆண்டாண்டு கால ஐதீகம்.

சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் நவகிரகங்களை தரிசனம் எளிதாக செய்வதற்கு கடலின் மேல் நடைமேடை அமைத்துள்ளது.இது பக்க்தர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ராமபிரான் இலங்கைக்கு சென்று ராவணனை கொன்ற தோஷம் நீங்குவதற்காக இங்கு நவகிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக இதிகாச வரலாறு கூறுகிறது.இங்கு கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு “கடல் அலையை தடுத்த ஜெகநாத பெருமாள் “ என்று பெயர் உண்டு.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger