இராமலிங்க விலாசம் அரண்மனை:

Tuesday, January 15, 2013 | comments

ராமநாதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.இவர்கள் அறத்தையும் அருந்தமிளையும் கண்ணென காத்து வளர்த்தனர்.இவர்களின் அரண்மனைதான் இராமலிங்க விலாசம் என அழைக்கப்படுகிறது. இராமலிங்க விலாச அரண்மனையில்தான் “ஜாக்சன் துரை-வீரபாண்டிய கட்டபொம்மன் சந்திப்பு நடைபெற்றது.

புகழுக்கு புகழ் சேர்க்கும் இந்த அரண்மனையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் இன்றளவும் சிதையாமல் உயிரோவியமாக காட்சி அளிக்கின்றது.இந்த அரண்மனையில் சேதுபதி மன்னர்களின் வாழ்க்கை வரலாறு ஓவியங்கள் தத்துருவமாக வரையப்பட்டுள்ளனர்.அரண்மனையில் அன்றைய வேலும் வாழும் போர் கருவிகளும் சேதுபதி மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அரண்மனையின் நீண்ட நெடிய விதானங்கள் ,மணிமண்டபங்கள்,உயர்ந்த மதில் சுவர்கள்,தாழ்வாரங்கள் எல்லாம் காண்பவர் கண்ணை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.தொன்மையான சுவர் ஓவியங்கள் மூலிகை செடியில் இருந்து உருவாக்கப்பட்ட வண்ணங்களால் வரையப்பட்டுள்ளதால் புது பொலிவுடன் காட்சி தருகின்றன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger