ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையை அடுத்துள்ளது ஏர்வாடி தர்கா.முஸ்லிம்களின் மிகமுக்கியமான புண்ணிய தலமான இங்கு மகான் சுல்த்தான் செய்யது இபுராஹிம் ஷகீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார்.

படம்: சந்தனகூடு திருவிழா
900 வருடங்களுக்கு முந்திய இந்த தர்காவின் சிறப்பும் பெருமையும் நாள்தோறும் வளர்ந்துகொண்டே வருகிறது.இதற்கு காரணம் இந்த தர்காவிற்கு வரும் தீராத நோயாளிகள் பில்லி சூநிய்ச்த்தால் பாதிக்கப்பட்டவர்கள் மன நோயாளிகள் இவர்கள் எல்லாம் குணமடைவதாக அனைத்து மதத்தவரும் ஆழமாக நம்புகிறார்கள். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சந்தன கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.இந்த திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து மத பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.இந்த திருவிழா மதனல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.இங்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மகானை தரிசித்து செல்கின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடிக்கு அடிக்கடி பஸ்கள் உள்ளன.
தர்காவை தொடர்புகொள்ள: 04576-263208

Post a Comment