வரலாற்று சிறப்பு பெற்ற தஞ்சை பெரிய கோவில்:

Sunday, January 20, 2013 | comments

சோழ மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பிரமாண்டமான ஆலயம்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.10-ம் நூற்றாண்டில் அதாவது கி.பி.1010 ல்  கட்டப்பட்ட இந்த ஆலயம் தஞ்சை “பெரியகோவில்” என்று அழைக்கப்படுகிறது.

மலைகளே இல்லாத தஞ்சை பகுதியில் கற்களால் கட்டப்பட்ட இந்த கோவிலின் பிரதான கோபுரத்தின் உயரம் 216 அடி.இதன் உச்சியில் ஒரே கல்லால் அமைக்கப்பட்ட விமானம் உள்ளது இதன் எடை 10 டன் எடை கொண்டவ கோபுர கலசத்தின் உயரம் 12 அடி. இந்த கோபுரத்தின் நிழல் தரையில் விழாது. என்பது ஒரு சிறப்பம்சம்.லிங்கத்தின் உயரம் 18அடி .ஒரே கல்லில் அமைந்த 13 அடி உயர நந்தி இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம்.

பெரியகோவில் அருகே அமைந்துள்ளது சிவகங்கை பூங்கா. ராஜராஜ சோழன் பிரகதீஸ்வரர் கோவிலுக்காக அமைத்த மலர் பூங்கா .இங்கு அமைக்கப்பட்டுள்ள குலத்துக்கு காவிரி புது ஆற்றில் இருந்து பாதாள வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது.பூமிக்குள் இருக்கும் சுரங்க வாய்க்கால் வழியாக தண்ணீரை வெளியேற்றவும் முடியும்.

கோவிலின் தொலைபேசி எண்: 954577-264240

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து பேருந்தும் பெரியகோவில் வழியாகவே செல்கிறது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger