அறுபடை வீடான பழமுதிர் சோலை எனப்படும் சோலைமலை மதுரையில் அழகர் கோவிலுக்கு மேலே உள்ள மலையில் உள்ளது.திருமாலிருஞ்சோலை மலையாகிய அழகர் கோவிலே பழமுதிர் சோலையாகவும் திகழ்ந்தது மகாவிஷ்ணுவுக்கும் அவரது மருமகனாகிய குமரப்பெருமானுக்கும் உரிய தலமாகவும் விளங்குகிறது.
திருமால் அழகர் மலை அடிவாரத்திலும் முருகன் மலைமீது பழமுதிர் சோலையிலும் கோவில்கொண்டுள்ளனர். நூபுர கங்கை தீர்த்தத்திற்கு அழகர் ஆலயத்தின் வடக்கு வாயில் வழியாக ஒற்றையடி பாதை செல்கிறது பழமுதிர் சோலையில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்பு வேலின் சிலா வடிவம் நாட்டப்பட்டு வழிபட்டு வந்தார்கள். தற்போதும் இந்த சிலா வடிவம் உள்ளது.
கோவில் போன் நம்பர்: 0452- 2470228
மதுரையில் இருந்து வடக்கே 23 கி.மீ தூரத்தில் சோலைமலை உள்ளது.

Post a Comment