திருப்பரங்குன்றம்:

Wednesday, January 16, 2013 | comments

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு மதுரைக்கு மிக அருகே உள்ள திருப்பரங்குன்றம்.இத்தலம் மதுரையில் இருந்து தென்மேற்கே  6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இறைவன் பரங்கிரி நாதர்,இறைவி ஆவுடைநாயகி,சரவனபொய்கை குன்றின் வடபாகத்தில் முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.

மண்டபத்தை அடுத்த 7 நிலை கொண்ட ராஜகோபுரமும்,கல்யாண மண்டபமும் இங்கே உள்ளது.கிழக்கே லட்சுமி தீர்த்தமும்,மேற்க்கே பிரம்ம கூடமும் இருக்கிறது.கல்யாண மண்டபத்தை அடுத்துள்ள கொடி மரத்திற்கு படிகள் வழியாக ஏறி செல்ல வேண்டும்.கொடிமரத்திற்கு முன்புறம் மயில்,நந்தி,முஷிகம் ஆகிய வாகனங்கள் அமைந்துள்ளது.மக மண்டபத்தில் இருந்து மலையை குடைந்து உருவாக்கப்பட்ட கர்ப்பகிரகத்தை உடைய அர்த்த மண்டபத்தை அடைய 6 படிகள் கடந்து செல்லவேண்டும்.இவை சராட்சரப் பாடுகள் எனப்படும்.மூலஸ்தானத்தில் காணப்படும் பாறையில் மகிசாசுர மர்த்தினியின் உருவமும்,கீழ்பகுதியில் முருகப்பெருமானின் திருமணக்கோலமும்,மேற்கு பகுதியில் கற்பக விநாயகரின் உருவமும் அற்புதமாக மலையை குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

மூலவரின் திருவுருவம் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளதால் அபிசேகம் எல்லாம் இறைவனின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கே நடைபெறுகிறது. இப்படைவீட்டில் முருகன் மணக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

திருப்பரங்குன்றம் கோவில்  தொலைபேசி: 2482248

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger