முருகப்பெருமானின் 5 வது படைவீடு திருத்தணி. திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பும் வழியில் பக்தர்கள் திருத்தணி முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.சூரபத்மன் மற்றும் வேடர்களோடு புரிந்த போரின் கோபம் தணிந்து முருகப்பெருமான் இங்கு வந்து அமர்ந்த படியால் திருத்தணிகை என்று அழைக்கப்பட்டது.திருத்தணி நகரின் நடுவே சுமார் 400 அடி உயரத்தில் தணிகை மலை அமைந்துள்ளது.மலையின் உச்சியில் ஆறுமுகப் பெருமானின் ஆலயம் இருக்கிறது.
கர்ப்ப கிரகத்தில் திருத்தணி கேசப் பெருமான் சுந்தர வடிவாய் இடக்கரத்தை தொடையில் அமைத்து வலக்கரத்தில் சக்தியாகிய வேலினை தாங்கி நின்று தரிசனம் தருகிறார்.
கோவிலின் தொலைபேசி எண்:954118-285225, 285243
மதுரையில் இருந்து 440 கி.மீ தூரத்தில் உள்ளது திருத்தணி. சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் ௮௪ கி.மீ தூரம் உள்ள திருத்தணிக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. ரெயிலில் சென்றால் அரக்கோணம் சந்திப்பில் இறங்கி 10 கி.மீ தூரத்தில் உள்ள திருத்தணிக்கு பஸ்சில் செல்லலாம்.

Post a Comment