பழனி மழையும் மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி திருத்தலத்தையும் உள்ளடக்கியதுதான் பழனி.முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடுதான் பழனி.அழகிய குன்றுகளில் இடையே காட்சிதரும் இந்த தலம் திண்டுக்கல்லில் இருந்து கோயபுத்தூர் செல்லும் வழியில் சுமார் ௬௦ கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஞான தண்டாயுதபாணியான முருகப்பெருமான் கர்ப்பகிரகத்தில் பால்யமூர்த்தியாய்,ஆண்டியாய்,ஒருகரத்தில் தண்டு ஏந்தி ,மற்றொரு கரத்தை இடையில் அமர்த்தி மேற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார்.மூலவரை போகர் என்ற புகழ் பெற்ற சித்தர் நவபாஷாணங்களை கொண்டு உருவாக்கி உள்ளார். போகர் ஆலயம் பிரகாரத்தின் தென்மேற்கில் உள்ளது.
இந்த நவபாஷாணம் காரணமாகவே முருகன் முருகன் மீது படும் அபிஷேகப் பொருட்கள் நோய் தீர்க்கும் தன்மையை பெற்றது.இதனால்தான் இங்கு மூலவருக்கு பன்னீர் ,பன்சாமிர்தம் ,விபூதி ஆகியவைகளால் அபிசேகம் செய்யப்படுகிறது.பழனி ஆண்டவனை வணங்கினால் பிறவி பிணி தீரும்.வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்திருத்தலத்தின் தொலைபேசி எண்: 04545-242236

Post a Comment