முருகனின் நான்காவது படைவீடு சுவாமிமலையை இது ‘திருவேரகம்' என்று அழைக்கப்படுகிறது.தஞ்சை மாவட்டம் மும்பகோனத்திற்கு மேற்கே 8 கி.மீ.தூரத்தில் சுவாமிமலை உள்ளது.இந்த திருத்தலத்தில் சுப்பிரமணியர் தெய்வானையுடன் காட்சி தருகிறார்.பிரணவதின் பொருள் தெரியாத பிரம்மாவை முருகன் சிறையில் அடைக்கிறார்.அப்போது சிவபெருமான் வந்து உனக்கு பொருள் தெரியுமா என்று கேட்க ,சிவபெருமான் சீடனாகவும்,கந்தன் குருவாகவும் இருந்து பிரணவ உபதேசம் செய்த இடம் தான் சுவாமிமலை.
இதனை விளக்கும் வகையில் சிவபெருமான் சன்னதி மலையின் கஈல்பாகத்திலும்,முருகன் சன்னதி மேல் பாகத்திலும் அமைந்துள்ளன.சுவாமிநாதன் தன்னை சரண் அடைந்தவர்கள் எவ்வளவு பெரியதவறு செய்து இருந்தாலும் பொறுத்து நிச்சயம் வாழ்வளிப்பார்.
கோயிலின் தொலைபேசி எண்: 95435-2454421
மதுரையில் இருந்து தாஞ்சாவூர் சென்றால் அங்கிருந்து சுவாமி மலைக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு.கும்பகோணம் போயும் சுவாமி மலை செல்லலாம்.

Post a Comment