வியக்கவைக்கும் பாம்பன் பலம் :

Tuesday, January 15, 2013 | comments

ராமேஸ்வரம் பாம்பன் பலம் வரலாற்று சிறப்புமிக்கது.தென்கிழக்கு ஆசியாவிலேயே கடல் மீது கட்டப்பட்டுள்ள நீண்ட நெடிய பாலம் இது.அன்னை இந்திராகாந்தி பாலம்  என்ற பெயரில் அழைக்கப்படும்  இந்த பாலம் உருவான பின்னணி சுவையானது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ரெயில் போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் 1986-ல் ஆங்கிலேயருக்கு ஏற்பட்டது.இதன் பின்பு முதல் கட்டமாக மண்டபத்திற்கும் -பாம்பனுக்கும் இடையே கீழே கப்பலும் மேலே ரெயிலும் செல்லும் வகையில் ஒரு ரெயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த ரெயில் பாலம் 1911ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.கடலில் அடி நீளமுள்ள துங்களை நிறுத்தி அதன்மீது தண்டவாளம் போட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.இதுவே முதல் பாலமாக நிலைத்தது.

கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் பயங்கர புயலும் கோர கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.இந்த பயங்கரத்தால் அதிசய ரெயில் பாலம் அலங்கோலமானது.இதனால் ரெயில் சேவை மண்டபத்தோடு நிறுத்தப்பட்டன.ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களும் பயணிகளும் பாம்பன் கடலில் படகுகளிலும் ,தோணிகளிலும் பாம்பனுக்கு சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் சென்றார்கள்.கடல் வெள்ளத்தால் பெரும் சேதமடைந்த பாம்பன் பாலத்தை மீண்டும் சரி செய்ய முடியாது என அப்போது பலரும் எண்ணினர்.ஆனால் மத்திய அரசரின் கட்டுமான நிபுணர்கள் 40 நட்களில் பாம்பன் பாலத்தை சீரமைத்து புதுப்பித்தனர்.

அப்போது பிரதமராக இருந்த இந்திராக்கந்தி  மற்றும் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆகியோர் பாம்பன் ரோடு பலத்திற்கு மண்டபத்தில் 1974 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்கள். இந்தியாவில் முதன் முதலாக கடலில் கட்டப்பட்ட ரோடும்,பாலமும் இதுதான்.இந்தியாவிலேயே மிக நீண்ட பாலமும் இதுதான்.கடல் மீது இவ்வளவு பெரிய பாலத்தை நிர்மாணித்ததன் மூலம் இந்திய கட்டுமான நிபுணர்கள் உலக சாதனை புரிந்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.

நடுக்கடலில் ராட்சத எந்திரங்களை பயன்படுத்தி மிகப் பிரமாண்டமான பள்ளம் தோண்டி சுற்றிலும் இரும்பு தகடுகளை கொண்டு அடைத்து கடல் நீரை வெளியேற்றி பூமிக்கு அடியில் உள்ள கற்பாறைகள் மீது காரியத்தை காய்ச்சி ஊற்றி பிரமாண்டமான தூண்களை எழுப்பியது அதிசயிக்கத்தக்க அரசு முயற்சியாகவே இருந்தது.இதுமாதிரியான வேலைகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மளமளவென நடந்தது.கட்டி முடிக்கப்பட்ட இந்த பாம்பன்  பாலத்தை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1987  ம் ஆண்டு நாட்டுக்கு அர்பனித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger