மீனாட்சி அம்மன் கோவிலில் கலை நுணுக்கங்கள்:

Sunday, January 13, 2013 | comments

மதுரையின் மங்காப் புகழுக்கு காரணமாக நிற்கும் அங்கயற்கண்ணியின் பெருங்கோவில் தமிழரின் கட்டிட சிற்பகலைகோர் உன்னதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அஷ்டசக்தி மண்டபம்:

அம்மன் கோவிலின் முன்பகுதி அஷ்டசக்தி மண்டபம்,வாயிலில் விநாயகர்,முருகன் உருவங்களிடையே மீனாட்சி அம்மன் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே அமைந்த 8பெருந்தூண்களையும் அஷ்டசக்தி சிலைகள் அழகு செய்கின்றான்.திருவிளையாடல் புராணகாட்சிகள் நிறைந்த இந்த மண்டபத்தில் மீனாட்சி ,சமயக்குரவர் ,துவாரபாலகர், விநாயகர்,சுப்ரமணியர் சிலைகளும் உள்ளன.

 

கம்பத்தடி மண்டபம்:

அற்புதமான சிற்பங்கள் பலவற்றைத் தாங்கி ,சிற்பக்களைக்கே ஒரு சீரிய எடுத்துக்காட்டாய் விளங்கி காண்போர் மனதை கொள்ளைகொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது கம்பத்தடி மண்டபம். மண்டபத்தின் நடுவே நந்தியும் பலிபீடமும் தங்கக் கொடி மரமும் உள்ளன.

இங்கு மீனாட்சி சுந்தரேசர் திருமணத்தை சித்தரிக்கும் சிற்பம் சிற்பக்கலைக்கு ஒரு சான்றாக உள்ளது. மீனாட்சியின் வனத்தில் காணும் மகிழ்ச்சி ,நாணம்,மலர்ச்சி,சுந்தரர் முகத்தில் தோன்றும் மிடுக்கு,ஆண்மை,கம்பீரம் இவற்றை எல்லாம் கல்லில் எவ்வாறு சமைக்க முடிந்தது என நினைத்து வியக்கத்தோன்றும்.கம்பத்தடி மண்டபத்தை அடுத்து இருதூண்களில் அக்னிவீரபத்திரர் , அகோர வீரபத்திரர் சிலைகளும் மற்றிரு துண்களில் ஊர்த்துவதாண்டவர்,காலி ஆகியோர் உருவங்களும் காட்சி அளிக்கின்றன.

ஆயிரங்கால் மண்டபம்:

ஆயிரங்கால் மண்டபம் கோவிலின் மற்ற மண்டபங்களை விட மிகப்பெரியது.வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் வருடம் அறுபதையும் கட்டும் சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.மண்டபத்தின் முன்பகுதியில் உள்ள கண்ணப்பர்,பிட்சாடனர்,அமைதி,குறவன்,குறத்தி முதலிய சிலைகளின் அழகு கண்டு அதிசயிக்கிறோம். உள்ளே கணக்கற்றசிர்பங்கள் நிறைந்தத 985 தூண்கள்உள்ளன. இத்தூன்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் அவை நேரான வரிசையில் அமைந்திருப்பது வியப்பளிக்கும்.மண்டபத்தின் மாருகொடியின் நடுவே நடராஜரின் அழகிய சிலை உள்ளது.

இந்த மண்டபத்தில் கலைப்பொருட்காட்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.கலையழகும்,தெய்வீக ஒளியும் வீசும் தெய்வங்களின் விக்கிரகங்களையும் மற்றும் பல தொல்பொருள்களையும் இங்கே காணலாம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger