இந்தியாவில் உள்ள மிக முக்கியமான புண்ணியஸ்தலம் இராமேஸ்வரம்.குட்டி தீவு போல் காட்சியளிக்கும் ராமேஸ்வரம் 34 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஒரு தீவு.மதுரையில் இருந்து 171 கிலோமீட்டர் தூரத்திலும்,சென்னையில் இருந்து 633 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
ராமநாத
சுவாமி கோவில் :
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று.ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்ட மண் சிவலிங்கம் இங்குள்ளத்தால் இந்த கோவில் ஸ்ரீராமநாதசுவாமி என்ற பெயருடன் சிவஸ்தலமாக விளங்குகிறது.அனுமன் கொண்டுவந்த சிவலிங்கம் சுவாமி சன்னதியின் இடதுபுறம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.இந்த சிவலிங்கங்களுக்கு பூஜை நடந்த பின்னரே மற்ற சாமிகளுக்கு பூஜைகள் நடைபெறும்.
இந்த கோவிலில் பார்வதி அம்மையார் ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் பெயரில் அருள் வழங்குகிறார்.இந்த கோயிலின் மூன்றாம் பிரகாரம் 1212 கம்பீரமான தூண்கள் மற்றும் சுற்று சுவருடன் இந்தியாவிலேயே மிகப்பெரிய பிரகார பாதைகொண்டதாக விளங்குகிறது.முதல் பிரகாரம் இலங்கை மன்னர் பராக்கிரம பாண்டியாரால் அமைக்கப்பட்டு கற்பகிரகம் அமைக்கப்பட்டது.கோவிலின் உட்பகுதியில் 12 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இது தவிர கோவிலுக்கு வெளியே பல இடங்களின் 108 தீர்த்தங்கள் உள்ளன.
அக்னி தீர்த்தம்:
கோவிலின் எதிரில் 100 மீட்டர்துரத்தில் கடலில் உள்ள அக்னி தீர்த்தப்பகுதி எந்தவித அலையும் இன்றி திகழ்கிறது.இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின்னரே மற்ற தீர்த்தத்தில் நீராடவேண்டும் என்பது ஐதிகம்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் பலதோஷங்கள் உள்ளவர்கள் இங்கு நீராடி ராமநாத சுவாமியை தரிசனம் செய்தால் நினைத்தவை கைகூடும.இங்கு ஆண்டு முழுவது பக்கதர்கள் சென்றுவரலாம்.
கோவில் திறக்கும் நேரம்:
| 4.30-AM | நடைதிறப்பு |
| 5.00 | ஸ்படிகலிங்க அபிஷேகம் |
| 6.30 | விளாபூஜை |
| 8.00 PM | அர்த்தசாமபூஜை,பள்ளியறை பூஜை |
| 9.00PM | நடைசாத்துதல் |
கோவில் தொலைபேசி எண்: 04573-221223
போக்குவரத்து வசதிகள்:
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து அடிக்கடி அரசு பஸ்களும் அரசு விரைவு பஸ்களும் உள்ளது.ராமநாதபுரத்தில் இருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் ராமேஸ்வரம் செல்கிறது.ரயில் சேவைகளும் (மதுரை –ராமேஸ்வரம்) உள்ளது.ரயில் கட்டணம் பேருந்து கட்டணத்தை விட குறைவு மற்றும் விரைவு.

Post a Comment