திருமலை நாயக்கர் மஹால்:

Tuesday, January 15, 2013 | comments

 

நாயக்கர் மஹால் என்றழைக்கப்படும் இந்த அரண்மைனை மதுரை நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி.1636ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்திய இஸ்லாமியக் கட்டிட கலைக்கு மைசூருக்கு தென்பகுதியில் மிகச்சிறந்த சான்றாக உள்ளது இது ஒன்றுதான்.இந்த அரண்மனை இத்தாலி நாட்டு கட்டிட கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது.

அரண்மனையின் முக்கிய பகுதி என்று சொல்லப்படுவது,உயர்ந்த மற்றும் பெரியதூண்ங்கள்கொண்ட செவ்வக வடிவில் உள்ள முற்றத்தின் நடுபகுதிதான்.அரண்மனையின் வெளிமுற்றம் 40 அடி உயரம் கொண்ட அறைஅழகுபட அமைக்கப்பட்டு கண்ணை கவரும் கூர்வளைவு சிற்ப வேலைப்பாடு கொண்டது.

தற்போது இம்மகாலில் 12அடி முதல்  40அடி உயரமுள்ள 240தூண்கள் உள்ளன.நாயக்கர் மகாலில் உள்ள தூண்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.இந்த மஹால் ‘சொர்க்க விலாசம்' ரெங்க விலாசம்’என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சொர்க்க விலாசம் வடக்கு தெற்காக 235 அடியும்,கிழக்கு மேற்காக 105 அடியுமாக இருந்தது.இப்போது அழிந்துவிட்டது.அரசு வாழ்விடமான சொர்க்க விலாசத்தையும் ரெங்க விலாசத்தையும் தவிர ஒரு நாடக சாலையும்,ஒரு கற்பகிரகமும்,அந்தபுரமும்,படைத்தளமும்,மன்னரின் இசைக்குழுவின் மேடையும்,வேலை ஆட்களின் இல்லங்களும்,அழகிய குளமும் பூந்தோட்டமும் இருந்தது.இவையனைத்தும் நான்கு புறமும் மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்தது.

இந்த வானளாவிய மதில் கிழக்கு மேற்காக 900 அடிகளும் ,வடக்கு தெற்காக 660 அடிகளும் ,40 அடி உயரமும் கொண்டவை.இந்த சுவற்றிற்கு ‘பாரிபதில்’என்று பெயர்.

பழமையான இந்த அரண்மனையில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அருங்காட்சியகம் உள்ளது.இதில் மதுரையின் பன்னெடுங்கால வரலாறும்,திருமலை மன்னரின் வாழ்க்கையும்,பணிகளும்,பாண்டிய நாட்டின் கலை மற்றும் கட்டிடகலை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுதுரையால் 1971இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் நுழைவு கட்டணத்துடன் அனுமதிக்கப் படுகிறார்கள்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கிழவாசல் வழியாக செல்லும் அனைத்து பேருந்தும் திருமலை நாயாக்கர் மஹாலில் நிற்கும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger