இந்திய தீபகற்பத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது உருவாக்கி இருக்கும் ஒரு புதிய சுற்றுலா தலம்.அரியமான் கடற்க்கரை சுத்தமான கடல் தண்ணீர் மற்றும் அழகான வெள்ளை மணலாலும் சுற்றுலா பயணிகளை ஒவ்வொரு நாளும் வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

கடற்கரையின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் சவுக்கு மரங்கள் கோடையின் வெப்பத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை பாதுகாக்கிறது. இம்மர நிழல்களில் அமைந்து கடலின் அழகையும் குளிந்த தென்றல் கரையும் அனுபவிக்கலாம்.
இந்த கடலில் பெரியவர் முதல் சிறியவர் வரை பயமின்றி குளிக்கலாம்.கடற்கரையில் இருந்து 50 அடி தூரம் வரை கடல் அதிக ஆழம் இல்லாமல் குளம்போல் அமைதியாக காணப்படுகிறது.சென்னைக்கு மெரீனா கடற்க்கரை போல ராமநாதபுரத்திற்கு அரியமான் கடற்க்கரை ஸ்ரிப்பளிக்கிறது.இக்கடற்கரைக்கு செல்ல ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 27 கிலோமீட்டர் தூரம்வரை பயணம் செய்ய வேண்டும்.

Post a Comment